Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா வைரஸ் தடுப்பு பேரணி

நவம்பர் 09, 2020 05:03

கும்பகோணம்: திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படியும், தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அறிவுரையின் படியும் திருநாகேஸ்வரம் பேரூராட்சி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட திருநாகேஸ்வரம் கும்பகோணம் சாலை, கடைவீதி வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

]இப்பேரணியை திருநாகேஸ்வரம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம் துவக்கி வைத்தார். இப்பேரணியில் பொதுமக்கள், அலுவலக பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த பெண்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவது குறித்தும்,சமுக இடைவெளி கடைபிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தலைப்புச்செய்திகள்