Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் கடும் சண்டை: ராணுவ கேப்டன் உள்ளிட்ட 4 பேர் வீர மரணம் 

நவம்பர் 09, 2020 06:58

ஜம்மு: காஷ்மீரில் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் உள்ளிட்ட 4 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணமடைந்தனர். குப்வாரா மாவட்டம் மச்சில் செக்டாரில் இந்திய ராணுவத்தினரும், பி.எஸ்.எப். வீரர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் ஊடுருருவல் முயற்சியில் ஈடுபட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது, பி.எஸ்.எப். கான்ஸ்டபிள் ஒருவர் வீரமரணமடைந்தார். பின்னர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது மீண்டும் சண்டை மூண்டது. இதில் ராணுவ கேப்டன் மற்றும் 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும், 2 வீரர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், இருதரப்புக்கும் தொடர்ந்து சண்டை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு முறை நடந்த இந்த தாக்குதலினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தாக்குதல் நடந்த மச்சில் செக்டார் பகுதியில் இருந்து மேகசின்கள், 60 சுற்று தோட்டாக்களுடன் இரண்டு ஏ.கே. 47 துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 29 சுற்று தோட்டாக்கள், ரேடியோ மற்றும் 50,000 ரூபாய் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்