Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

நவம்பர் 09, 2020 10:15

சென்னை: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் நேற்று முதல் தொடங்கியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு இ-பாக்ஸ் நிறுவனம் மூலம் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டன.

நடப்பாண்டும் அதே நிறுவனம் தான் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை அளிக்க இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, 14 ஆயிரத்து 975 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். அவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடந்த 1ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மாணவர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்த காரணத்தினால் அது தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் நேற்று தொடங்கியது. நடப்பு கல்வியாண்டுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை இ-பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அரசு நடத்துகிறது. 2021ல் நீட் தேர்வு நடைபெறும் முந்தைய வாரம் வரை மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்