Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பருவமழை காலத்தில் நிரம்பும் ஏரிகள்: சென்னை மாநகர பொதுமக்கள் மகிழ்ச்சி 

நவம்பர் 10, 2020 06:16

சென்னை: சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நான்கு ஏரிகள் பருவமழையின் பயனாக மெல்ல நிரம்பி வருவது மாநகரவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், செங்குன்றம் ஆகிய ஏரிகள் சென்னை மாநகரின் முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ளன. கடந்த சில வாரங்களாக பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையின் பயனாக இந்த ஏரிகள் அனைத்தும் மெல்ல நிரம்பி வருகின்றன.

பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் முழு கொள்ளளவு முறையே 3,231, 1,081, 3,300, 3,645 கன அடி ஆகும். தற்போதைய நிலவரப்படி, இந்த நான்கு ஏரிகளும் முறையே 1,477, 138, 2,207,2,429 கன அடி அளவுக்கு நிரம்பியுள்ளன. அதாவது, நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவில் தற்போது 55 சதவீதம் அளவுக்கு நிரம்பியுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முறையே 988, 271 கன அடி அளவுக்கே நிரம்பியிருந்தன. மேலும் நான்கு ஏரிகளிலும் சேர்த்து, மொத்த நீரின் அளவு 3,009 கன அடியாக மட்டுமே இருந்தன.

இதுவே, குறிப்பிட்ட ஏரிகளில் தற்போது 8,000 கன அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பருவமழை பெய்தால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு ஏரிகளும் அவற்றின் முழு கொள்ளளவை எட்டும். அதாவது, ஒருநாளைக்கு சராசரியாக 120 மி.மீ., முதல் 150 மி.மீ., அளவுக்கு, தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மழை பெய்தால், ஏரிகளின் நீர் வரத்து அதிகரித்து அவற்றின் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பாக அமையும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தலைப்புச்செய்திகள்