Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் போலியாக ஆதார் தயாரித்த 2 பேர் கைது

நவம்பர் 11, 2020 05:46

புதுடெல்லி: ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை போன்ற அடையாள அட்டைகளை போலியாக தயாரித்து மர்ம கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனியார் வங்கி ஒன்று தங்களிடம் போலி ஆவணங்களுடன் சிலர் பணப்பரிமாற்ற அட்டைகளுக்கு விண்ணப்பித்ததாக புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த கும்பலுக்கு வலை விரிக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 4-ந் தேதி 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், ஆதார், பான் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிக அளவில் பணமும், நகையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிலரை தேடி வந்தனர். இந்த நிலையில் மங்கல்புரியை சேர்ந்த உமேஷ் சந்தர் (வயது 29), ரவிசச்தேவா (36) ஆகியோர் பிடிபட்டனர். இவர்களில் உமேஷ் சந்தர், ஆதார் தகவல்களை செயல்படுத்தும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதும், அதன் அடிப்படையில் தனியே ஒரு நிறுவனத்தை தொடங்கி போலி ஆவணங்களை தயாரித்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்