Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் 3 பேர் சுட்டுக்கொலை: கமல்ஹாசன் கண்டனம்

நவம்பர் 12, 2020 10:48

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்