Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டிசம்பர் மாத இறுதிக்குள் ரஜினி அரசியலுக்கு வருவார்: சகோதரர் சத்யநாராயணராவ் பேட்டி

நவம்பர் 13, 2020 10:10

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் உலக மக்கள் கொரோனாவில் இருந்து மீளவும், உலக மக்கள் அமைதி வேண்டி சிறப்பு பூஜை மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பில் பக்தர்கள் வசதிக்காக நடைபாதைக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய மின்விளக்குகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ரஜினி மக்கள் மன்ற முன்னாள் மாவட்ட துணை செயலாளர் காந்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் கெய்க்வாட் கலந்து கொண்டு சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆரோக்கியத்துடன் இருந்து மக்கள் பணியாற்றுவார். டிசம்பர் மாத இறுதிக்குள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார். நல்ல முடிவு தெரியும். ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அடிக்கடி தொலைபேசி மூலம் நலம் விசாரித்து வருகிறேன். கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது கோவில் செயல் அலுவலர் சண்முகம், அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்