Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3.26 கோடி உண்டியல் வசூல்

நவம்பர் 15, 2020 10:12

திருமலை: கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திருப்பதி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்து வருகின்றனர். முதலில் 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு சென்று வருகின்றனர்.

இதனால் முதலில் லட்சக்கணக்கில் வசூலாகி வந்த உண்டியல் வருவாய் மெதுவாக உயர்ந்து கோடியை தொட்டது. அதற்கு பின் ரூ.2 கோடிக்கு அதிகமாக வசூலானது. இந்நிலையில் நேற்று முன்தினம் உண்டியல் வசூல் ரூ.3.26 கோடியை எட்டியது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கடந்த 8 மாதத்திற்கு பிறகு அதிகபட்சமாக ரூ.3.26 கோடி வசூலாகி உள்ளது. அன்று 22,462 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7,852 பேர் முடிகாணிக்கை செலுத்தினர்.

நேற்று 23,232 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 8,400 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.1 கோடியே 55 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்