Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்:  எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

நவம்பர் 15, 2020 10:14

சென்னை: அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நிர்வாகிகளாக அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், செ.செம்மலை, ஜே.சி.டி.பிரபாகர், எஸ்.கோகுல இந்திரா, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், சிறுபான்மை பிரிவு நலச் செயலாளர், அ.அன்வர்ராஜா, மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

தேர்தல் பிரசார குழு நிர்வாகிகளாக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி., துணை செயலாளர்கள் வைகைச் செல்வன், பு.தா.இளங்கோவன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். கட்சியின் சார்பில் செய்தியாளர்களை சந்திக்கும் நிர்வாகிகளாக அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயகுமார், க.பாண்டியராஜன், கொள்கை துணை பரப்பு செயலாளர் வைகைச் செலவன், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளுக்கு பதில் அளிக்கும் குழுவில் கட்சியின் அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், செ.செம்மலை. அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கொள்ளை பரப்பு துணைச் செயலாளர் வைகைச்செல்வன், முன்னாள் எம்.பி. ரபி பெர்னார்ட், செய்தி தொடர்பாளர்கள் மருது அழகுராஜ், பாபு முருகவேல் ஆகியோர் நிர்வாகிகளாக இருப்பார்கள்.

ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக முன்னாள் எம்.பி. ரபி பெர்னார்ட், செய்தி தொடர்பாளர்கள் மருது அழகுராஜ், இணை ஒருங்கிணைப்பாளர்களாக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளர் அஸ்பயர் கே.சுவாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்