Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குளிர்காலத்தை ஒட்டி கேதார்நாத் கோவில் நடை சாத்தப்பட்டது

நவம்பர் 17, 2020 06:20

கோபேஷ்வர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை, குளிர்காலத்தை ஒட்டி நேற்று சாத்தப்பட்டது. இதையொட்டி காலையில் நடைபெற்ற விழாவில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ராவத், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றனர். பின்னர் காலை 8.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

கேதார்நாத் கோவிலுக்கு நேற்று முன்தினம் வந்த இரு மாநில முதல்வர்களும், அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றனர். கேதார்புரியில் நடைபெறும் மறுகட்டுமான பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். கேதார்நாத் கோவிலில் சிவபெருமானுக்கான விசேஷ பூஜையை கோவில் தலைமை குருக்கள் நடத்தினார். அதன்பின், சிவபெருமான் சிலை, உற்சவ டோலி எனப்படும் மலர்ப்பல்லக்கில் வைக்கப்பட்டது. அது உக்கிமாத் நகரில் உள்ள ஓம்காரேஷ்வர் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, குளிர்காலத்தில் அங்கு வழிபடப்படும்.

கேதார்நாத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய பனிப்பொழிவு, நேற்று காலை வரை நீடித்தது. இந்த கோவில் நடை, கடந்த ஏப்ரல் 29-ந் தேதி திறக்கப்பட்டாலும், கடந்த ஜூலை 1 வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு கேதார்நாத் கோவிலுக்கு 1.35 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்