Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தினகரன் பொதுச்சின்னத்திற்காக இவ்வளவு போராடியது ஏன்?

மார்ச் 27, 2019 07:45

சென்னை: உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடுசெய்து, இத்தனை நாட்கள் அதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்றுவதே இலக்கு அதனால்தான் அமமுகவை பதிவுசெய்யவில்லை எனக்கூறிய தினகரன், நேற்று நான் கட்சியை இப்போதே பதிவுசெய்கிறேன் எனக்கு பொதுச்சின்னம் கொடுங்கள் எனக்கூறினார். அந்தளவிற்கு அவர் பொதுச்சின்னத்தை பெற்றே ஆகவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். பொதுச்சின்னத்திற்காக அவர் இவ்வளவு போராடுவது ஏன்? 

பொதுச்சின்னம் என்பது அனைத்து தொகுதிகளுக்குமான பொதுவான சின்னம். அனைத்து தொகுதிகளிலும் ஒரு கட்சி அந்த ஒரு சின்னத்திலேயே போட்டியிடும். இல்லையென்றால் ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிடவேண்டிவரும். எந்தத் தொகுதியில் எந்த சின்னம் என்ற குழப்பம், அந்தந்த சின்னங்களை அந்தந்த தொகுதி மக்கள் மனதில் பதியவைக்க ஏற்படும் தாமதம் இப்படியாக பல பிரச்சனைகள் பொதுச்சின்னம் பெறவில்லையென்றால் நிகழும். இதனால்தான் அனைத்து கட்சிகளும் பொதுச்சின்னத்தை பெற அதீத முயற்சி செய்கின்றன.

தலைப்புச்செய்திகள்