Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மெரினாவில், கப்பலுக்கு வழிகாட்டும் மிதவை கரை ஒதுங்கியது

நவம்பர் 18, 2020 07:23

சென்னை: சென்னை மெரினா கடலில் கடற்கரையோரம் நேற்று மாலையில் மர்மபொருள் ஒன்று மிதந்து வந்து கரை ஒதுங்கியது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவல்லிக்கேணி உதவி போலீஸ் கமிஷனர் சரவணன் மற்றும் அண்ணாசதுக்கம், திருவல்லிக்கேணி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கடலோர பாதுகாப்புபடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்வையிட்டபோது, அது கப்பலுக்கு வழிகாட்டும் மிதவை என்பது தெரியவந்தது. கடலில் அலை எவ்வாறு உள்ளது. கடல்சீற்றம் எவ்வாறு இருக்கிறது என்பதை இந்த மிதவைதான் வழிகாட்டும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனை கைப்பற்றி, இந்த மிதவை எப்படி இங்கு வந்தது என்று விசாரித்து வருகிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்