Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரவல் அதிகரிப்பு: அகமதாபாத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

நவம்பர் 20, 2020 04:56

அகமதாபாத்: கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை தடுப்பதற்காக மார்ச் 25-ம் தேதி முதல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன்பின், கொரோனா பாதிப்பு குறைய தொடக்கிய பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. 

இதற்கிடையே, குஜராத்தின் அகமதாபாத் நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் வேகம் அதிகரித்து வருகிறது. அங்கு புதிதாக உருவாகும் நோயாளிகளால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அகமதாபாத் மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அகமதாபாத் மாநகராட்சி முழுவதும் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும்வரை இந்த நடவடிக்கை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மாநில கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் குமார் குப்தா வெளியிட்டு உள்ளார். மேலும் இந்த ஊரடங்கு நேரத்தில் பால் மற்றும் மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்