Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பணம் பறிமுதல் செய்வதில் தமிழகத்திற்கு முதலிடம்

மார்ச் 27, 2019 08:16

தமிழகம்: இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம் , சில்வர் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பை மாநிலங்கள் வாரியாக  வெளியீட்டது. இந்த பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள வட மாநிலங்களை காட்டிலும் பணம் பறிமுதல் செய்தது தமிழகத்திலே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன் படி தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் சுமார் 36.6 கோடி பணம் பறிமுதல் செய்ததாகவும் , சுமார் 68 கோடி ரூபாய்  மதிப்புள்ள தங்கம் , மற்ற பொருட்கள் உட்பட சுமார் 107.24 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நேற்று வரை தமிழக தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்திற்கு அடுத்த படியாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் பணம் 8.26 கோடியும்  மற்றும் 59.04 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் சில்வர் உட்பட 104. 53 கோடி ரூபாய் மதிப்புடைய பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே போல் டெல்லி மற்றும் லட்சத்தீவில் ஒரு ரூபாய் கூட பணம் புழக்கங்கள் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம் , சில்வர் , மற்ற பொருட்களின் மதிப்பு சுமார் 539.992 கோடி ஆகும். 

மேலும் கடந்த தேர்தலில் தமிழகத்தில் பணப்புழக்கங்கள் அதிகமாக இருந்ததால் தான் தற்போதைய மக்களவை தேர்தல் குறைந்த கால இடைவெளியில் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிப்பாணையை வெளியீட்டது. ஆனால் அப்படியும் பணம் புழக்கங்கள் கட்டுப்படுத்த முடியாததால் அதிர்ச்சியில் இந்திய தேர்தல் ஆணையம் உள்ளது. எனவே இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல புதிய கட்டுபாடுகள் மேலும் விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்