Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விசுவாசமாக பணியாற்றினால் உயர்ந்த பொறுப்புக்கு வரலாம்:  தொண்டர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

நவம்பர் 21, 2020 09:23

தேனி: தேனிமாவட்டம், கைலாசபட்டி அருகே அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எம். சையது கான், தேனி எம்.பி. ப. ரவீந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசியது:

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியிலும், புதிய வாக்காளர் சேர்ப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். வயது, புகைப்படம் மாறியவர்களுக்கு அதை சரி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பூத் வாரியாகத் திட்டமிட்டு தேர்தல் பணியாற்ற வேண்டும். விசுவாசமாக பணி யாற்றும் தொண்டர்கள் உயர்ந்த பொறுப்புக்கு வருவர். இந்த வாய்ப்பு அதிமுகவில்தான் உள் ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நிறை வேற்றும் வகையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர் வெற்றிபெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கம்பம் எம்எல்ஏ எஸ்.டி.கே. ஜக்கையன், முன்னாள் எம்.பி. ஆர். பார்த்திபன் மற்றும் நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்