Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அசாம் முன்னாள் முதல் மந்திரி தருண் கோகாய் உடல்நிலை கவலைக்கிடம்

நவம்பர் 22, 2020 06:34

கவுகாத்தி: அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில முதல் மந்திரியாக 3 முறை பதவி வகித்தவருமான தருண் கோகாய் (82), கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.  தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்த பிறகு, கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்று வந்த தருண் கோகாய், கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

இதையடுத்து, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக , கடந்த 1-ம் தேதி மீண்டும் தருண் கோகாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், தருண் கோகாய் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது என அசாம் மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக, சுகாதாரத்துறை மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், மெக்கானிக்கல் வெண்டிலேஷன் உதவியுடன்  தருண் கோகாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பல உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த 48 முதல் 72 மணி நேரம்  மிக முக்கியமானது. சாத்தியமான அனைத்தையும் நாங்கள் முயற்சித்து வருகிறோம் என தெரிவித்தார். 

தலைப்புச்செய்திகள்