Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி நிலையங்கள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறுகிறது

நவம்பர் 22, 2020 07:16

ஆப்பிள் நிறுவனம் தனது 9 உற்பத்தி நிலையங்களை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்.

பெங்களூருவில் கானொலி மூலமாக நடந்த 23-வது தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவுக்கு பெரிய திட்டங்களுடன் வருவதாகக் கூறினார். முதல் கட்டமாக சீனாவில் இருந்து 9 உற்பத்தி நிலையங்களை இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. கரோனா பரவலுக்குப் பிறகு சீனாவுக்கு மாற்றாக சர்வதேச உற்பத்தி துறை தனக்கான மற்றொரு சந்தையை யோசித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு மின்னணு துறைக்கு அறிவித்துள்ள உற்பத்தி சார் ஊக்கத்தொகை சலுகை திட்டம் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. ஏற்கெனவே சாம்சங், ஃபாக்ஸ்கான், ரைசிங் ஸ்டார், விஸ்ட்ரான் மற்றும் பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் சலுகை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

தலைப்புச்செய்திகள்