Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தடையை கடந்து பிரச்சார பயணம் தொடரும் -திமுக

நவம்பர் 23, 2020 08:00

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் டி.ஆர்.பாலு. கே.என்.நேரு, ஆ.ராசா, கனிமொழி, ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, எ.வா.வேலு, தயாநிதிமாறன், டி.கே.எஸ்.இளங்கோவன், க.பொன்முடி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தலைப்பில் திமுக தேர்தல் பிரச்சார செய்ய திட்டமிட்டுள்ளது. திமுகவின் பிரச்சார பயணம் தடையை கடந்து தொடரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்தெறிந்து திமுகவின் பிரச்சார பயணம் தொடரும்.
மக்களாட்சியில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்யும் உரிமை உண்டு.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டந்தோறும் அரசு விழாவை அரசியல் கூட்டமாகவே நடத்தி வருகிறார்.உதயநிதி உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்து நீண்டநேரம் காவல்துறை கட்டுப்பாட்டில் வைப்பது கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்