Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போடூர்பள்ளம் வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளால் கிராம மக்கள் அச்சம்

நவம்பர் 23, 2020 10:05

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து 38 யானைகள் இடம் பெயர்ந்து ஓசூர் அருகே சானமாவு காட்டில் பதுங்கின. நேற்று முன்தினம் இரவு அந்த யானைகள் அருகிலுள்ள பீர்ஜேபள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்குள் புகுந்து ராகி, கொள்ளு உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தற்போது போடூர் பள்ளம் வனப்பகுதியில் யானை கூட்டம் சுற்றித்திரிவதால் ராமாபுரம், குக்கலபள்ளி, சானமாவு, பீர்ஜேபள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், காட்டு பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து ஓட்டி செல்லக்கூடாது, இரவு நேரங்களில் வீட்டை விட்டு தனியே செல்லக்கூடாது என்று பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போடூர் பள்ளம் வனப்பகுதியில் யானைகள் சுற்றித்திரிவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்