Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : ராணுவ அதிகாரி வீர மரணம்

நவம்பர் 27, 2020 06:15

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிர்னி காஸ்மா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று அத்துமீறி இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்திய தரப்பும் தகுந்த பதிலடி கொடுத்தது.

இந்த தாக்குதலில் ராணுவ அதிகாரி ஸ்வதந்திர சிங் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்