Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

மார்ச் 29, 2019 06:50

புதுடெல்லி: அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்பதால் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

‘அதிமுகவில் பொதுச்செயலாளர் நியமனம் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படும். இதன்படி தேர்தல் தொடர்பான வேட்பு மனு படிவத்தில் பொதுச்செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும். வேட்பு மனு ஏ மற்றும் பி படிவங்களில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 

இந்நிலையில், இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது மனுதாரர் கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அதிமுக வேட்பு மனுவில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க முடியாது எனக் கூறி, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

தலைப்புச்செய்திகள்