Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனாவுக்கு இடையே இருவருக்கு தூக்கு தண்டனை: கலக்கத்தை ஏற்படுத்திய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

நவம்பர் 29, 2020 10:28

இதுகுறித்து தென்கொரிய உளவுத் துறை அமைப்பு கூறும்போது, “ கரோனா பரவலைத் தடுப்பதற்கும், பொருளாதாரத்தை மீட்பதற்கும் வடகொரியா அதிபர் கிம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் வடகொரியாவில் பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததாக கூறி உயர் அதிகாரி ஒருவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றி உள்ளார் கிம். மேலும் . கரோனா கட்டுப்பாட்டு சுங்க விதிகளை மதிக்காமல் வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்த ஒருவருக்கும் மரண தண்டனையை கிம் அரசு நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் வடகொரியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீன்பிடிப்பதற்கும், பகுதி நேர ஊரடங்குக்கும் அந்நாட்டு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உலகம் முழுவதும் கரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அதிபர் கிம், தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா பரவல் தொடங்கியுள்ளது.

தலைப்புச்செய்திகள்