Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வட இந்தியாவில் கடும் குளிர் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நவம்பர் 30, 2020 12:36

வட இந்தியாவில் குளிர்காலத்தில் 2020 டிசம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை இயல்புக்கும் குறைவான வெப்ப நிலை நிலவுவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வானிலைத் துறை கடந்த 2016ம் ஆண்டு முதல் பருவகால முன்னறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குளிர்கால வெப்பநிலை குறித்து இந்திய வானிலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டின் வடக்கு, வடமேற்கு, மத்தியப் பகுதி மற்றும் கிழக்கிந்திய பகுதியில் வரும் டிசம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்புக்கும் குறைவானதாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள், மேற்கு கடலோர பகுதியின் சில பகுதிகள், நாட்டின் தெற்கு தீபகற்ப பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்புக்கு அதிகமாக இருக்கும்.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்