Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,118 பேருக்கு புதிதாக கொரோனா - 482 பேர் பலி

டிசம்பர் 01, 2020 07:29

புதுடெல்லி: இந்தியாவில் தினமும் 90 ஆயிரம் பேருக்கு பாதிப்பு என உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. ஆனாலும், வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து சராசரியாக 30 ஆயிரம் என்ற அளவிலேயே உள்ளது. அதேவேளை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது.  இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட தகவலில் கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 31 ஆயிரத்து 118 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94 லட்சத்து 62 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 603 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரத்து 985 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 88 லட்சத்து 89 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 482 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 37 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்