Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாயை கட்டி அணைத்து விஷாலை வெறுப்பேற்றிய நடிகை 

டிசம்பர் 02, 2020 08:44

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சரத்குமார். இவரது மகள் வரலட்சுமி. தமிழில் சிம்புவுடன், ‘போடா போடி’ படம் மற்றும் தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். இதன் மூலம் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வரலட்சுமி வலம் வருகிறார்.  ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நல்ல கதாபாத்திரங்களில் வில்லி வேடம் கிடைத்தாலும் நடித்து வருகிறார். 

இதற்காக வரலட்சுமி உடல் எடையை குறைத்து சிக்கென்று மாறிவிட்டார். அந்த வகையில் தற்போது வரலட்சுமி நடிப்பில் சேசிங், கிராக் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் தனது செல்ல நாயை கட்டிபிடித்து வரலட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது  இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

விஷாலுடன் காதல் முடிவுக்கு பிறகு வரலட்சுமி நாயை கட்டியணைத்து வெளியிட்ட புகைப்படம் விஷாலை வெறுப்பேற்றுவதற்காகவே என சமூக வலைதளவாசிகள் பந்தயம் கட்டுகின்றனர்.   
 

தலைப்புச்செய்திகள்