Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இன்று முதல் 2 நாட்கள் 12 மாவட்டங்களுக்கு அனல்காற்று எச்சரிக்கை: வானிலை மையம்

ஏப்ரல் 02, 2019 08:41

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு அனல்காற்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்துகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய 12 மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். வெயில் 98.6 டிகிரி வரை பதிவாகும் என்று தெரிவித்துள்ளது. 

அனல்காற்று வீசுவதால் நண்பகல் நேரத்தில் பயணத்தை தவிர்க்கும்படியும், அதிகப்படியான நீர் மற்றும் நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிடும்படியும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்

தலைப்புச்செய்திகள்