Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடலோர கிராம மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்- விஜய் வசந்த் வேண்டுகோள்

டிசம்பர் 03, 2020 07:23

நாகர்கோவில்: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வங்க கடலில் உருவாகி உள்ள புதிய புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும் எனவும், கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பது அவசியம். விவசாய காப்பீடு செய்து கொள்ளவும், கடலோர கிராம மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், மிகவும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்கவும். எனவே குமரி மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்கிறேன். மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்