Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

‘லிப்டு’க்குள் சிக்கிய முதலமைச்சர்

டிசம்பர் 03, 2020 07:35

புதுச்சேரி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண், ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலை முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் ஆகியோர் கலெக்டர் அருணை பார்ப்பதற்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றனர்.

கலெக்டரை பார்த்துவிட்டு அங்கிருந்து லிப்ட் மூலம் கீழே இறங்கி வந்தனர். தரை தளத்திற்கு வந்ததும் லிப்டின் கதவு திறக்கவில்லை. இதனால் முதலமைச்சர் உள்பட 3 பேரும் லிப்டின் உள்ளேயே சிக்கி கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதைத் தொடர்ந்து அங்குள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் விரைந்து வந்து 10 நிமிடம் போராடி கதவை திறந்தனர். அதன்பின்னர் 3 பேரையும் பத்திரமாக ‘லிப்டில்’ இருந்து வெளியே அழைத்து வந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்