Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை

டிசம்பர் 04, 2020 07:29

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ்  இ  இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
 
150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சியில் 74.67 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 1,122 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 9,101 வாக்குச்சாவடிகளில் மாநகராட்சி தேர்தல் நடந்தது.

டிஆர்எஸ் 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் 10, ஓவைசியின் எஐஎம்ஐஎம் 51 இடங்களில் போட்டியிட்டது. ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற சந்திரசேகரராவின் ஆளும் டிஆர்எஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளது. அதன்பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்