Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஜினி கட்சிக்கு ஆதரவு: அர்ஜூன் சம்பத் முடிவு!

டிசம்பர் 04, 2020 07:42

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினி வரும் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ரஜினியின் கட்சி அறிவிப்பை தொடர்ந்து அவரது தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். 

மேலும் கோயம்புத்தூர் ராகவேந்திரா கோயிலில் ரஜினி தொண்டர்கள் வழிபாட்டு கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு, “திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு வாக்களித்து சலித்து போன மக்களுக்கு ரஜினி ஆன்மீக அரசியலை வழங்க இருக்கிறார். ரஜினி மக்களை ஈர்ப்பார். ஆன்மீக அரசியல் கொண்ட ரஜினியின் கட்சிக்கு வரும் தேர்தலில் இந்து மக்கள் கட்சி உறுதுணையாக நிற்கும்” என்றார். 

தலைப்புச்செய்திகள்