Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை?: தமிழருவி மணியன் டென்ஷன்

டிசம்பர் 04, 2020 07:44

சென்னை: அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ள ரஜினி  முக்கிய பொறுப்பு ஒன்றை தமிழருவி மணியனுக்கு அளித்துள்ளார். இந்த நிலையில் கட்சியின் முதல்வர் வேட்பாளர் ரஜினி இல்லை என்று தமிழருவி மணியன் கூறியதாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் கசிந்தன. இது ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையறிந்த தமிழருவி மணியன், ‘முதல்வர் வேட்பாளர் குறித்து நான் எதுவும் பேசவில்லை. ரஜினியிடம் இருந்து என்னை பிரிக்க சதி செய்கின்றனர்’ என தமிழருவி மணியன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் பிறகே ரஜினி ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தலைவர் கட்சி தொடங்குவதற்குள் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? என்று சொல்லியும் சிரிக்கின்றனர். 

தலைப்புச்செய்திகள்