Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஜினிக்கு ஒரு கோடி இந்துக்கள் வாக்கு நிச்சயம்; எஸ்.வி சேகர் நம்பிக்கை

டிசம்பர் 04, 2020 07:55

சென்னை: நீண்ட காலமாக அரசியலுக்கு வருவதாக சொல்லி ரசிகர்களுக்கு டிமிக்கி கொடுத்து வந்த ரஜினி ஒரு வழியாக தனது கட்சி தொடங்கும் திட்டத்தை உறுதி செய்துவிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‘கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றும் பின் வாங்க மாட்டேன். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் நிச்சயம் நடக்கும். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கொரோனாவால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. எனினும் இந்த அரசியலில் நான் வெறும் கருவிதான். தமிழக மக்கள் தான் என்னை இயக்குபவர்கள். இந்த தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் அது மக்களுடைய வெற்றி அல்லது தோல்விதான்” என்று கூறினார். அப்போது கட்சிக்கு இரண்டு பொறுப்பாளர்களாக அர்ஜுன் மூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகியோரை நியமித்தார்.

இதையடுத்து ரஜினிக்கு பல தரப்பில் இருந்து ஆதரவுக்குரல்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் ரஜினியின் நண்பரான எஸ்.வி சேகர் ‘நாம் நிச்சயமாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, நேர்மையான, ஊழலற்ற, வெளிப்படையான் ஆன்மிக அரசியலை வெளிப்படுத்துவோம். கண்டிப்பாக ஒரு அதிசயம் ரஜினி மூலமாக நடக்கும். ஒரு கோடி இந்துக்களின் வாக்கு உறுதியாகிவிட்டது.’ என கூறி உள்ளார். 

தலைப்புச்செய்திகள்