Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜி.எஸ்.டி, ரூ.1 லட்சம் கோடி வசூல்

ஏப்ரல் 02, 2019 09:12

புதுடில்லி:ஜி.எஸ்.டி. வசூல் வருவாய் மார்ச் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து உள்ளது.இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:ஜி.எஸ்.டி. வசூல் வருவாய் மார்ச் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது. 

இதில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.20 ஆயிரத்து 353 கோடி, மாநில அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.27 ஆயிரத்து 520 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.50 ஆயிரத்து 418 கோடி, கூடுதல் வசூல் ரூ.8 ஆயிரத்து 286 கோடி ஆகும். அதே சமயம் கடந்த ஆண்டில் இதே மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.92 ஆயிரத்து 167 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.2018-19-ம் ஆண்டின் சராசரி ஜி.எஸ்.டி. வசூல் ரூ.98 ஆயிரத்து 114 கோடி. இது, 2017-18-ம் ஆண்டை ஒப்பிடும் போது 9.2 சதவீதம் கூடுதலாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்