Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்- தமிழக அரசுக்கு, விஜயகாந்த் வலியுறுத்தல்

டிசம்பர் 06, 2020 11:26

சென்னை: தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தை புரட்டி போட்ட ‘நிவர்’ புயலில் இருந்து மக்கள் மீளாத நிலையில், தற்போது 2-வதாக ‘புரெவி’ புயலையும் எதிர் கொண்டுள்ளனர். ‘புரெவி’ புயலால் தமிழக கடலோர மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. முறையான வடிகால் வசதி செய்யாததாலும், தூர்வாராததாலும், மழைநீர் வெளியேற வழியின்றி விளைநிலங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருப்பதை பார்க்க முடிகிறது.

லட்சக்கணக்கில் முதலீடு செய்த விவசாயிகள் மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் மூழ்கி கிடப்பதை கண்டு கண்ணீர் வடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மழையால் சேதமடைந்த விளைநிலங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். மேலும் வடிகால் வசதியை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு மத்திய அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்