Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து: ஆவணங்கள் நாசம்

டிசம்பர் 07, 2020 05:26

சென்னை:  சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தேனாம்பேட்டையில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி அணைத்தனர். அதற்குள் ஆவணங்கள், கணிப்பொறிகள் ஆகியவை எரிந்து நாசமாயின.

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவே தீவிபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளது. இதனால் தீ விபத்தில் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்