Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு; மாணவர்கள் உற்சாகம்

டிசம்பர் 07, 2020 05:35

சென்னை: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இறுதியாண்டு இளநிலை மாணவர்களுக்காக கல்லூரியை திறக்க தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. விருப்பமுள்ள மாணவ மாணவிகள் கல்லூரிகளுக்கு வருகை புரியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு அருகே உள்ள உறவினர்கள் வீடுகளில் மாணவர்கள் தங்கி கொள்ளலாம் எனவும் கல்லூரியின் விடுதியில் ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் எனவும் தொற்று இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள மாணவ மாணவிகள் கல்லூரிகளுக்கு வருகை புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு சானிடைசர் கொடுக்கப்படுகிறது. வெப்பமானி கொண்டு சோதனை செய்யப்படுகிறது. கையை நன்றாக கழுவிக்கொண்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். நீண்ட காலத்திற்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

தலைப்புச்செய்திகள்