Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெங்களூருவில் பிறந்தநாள் கொண்டாடும் ரஜினி:  அண்ணனுடன் முக்கிய ஆலோசனை 

டிசம்பர் 07, 2020 06:01

சென்னை: ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ரஜினி ஆசி பெற்றார். பெங்களூருவுக்கு சென்றுள்ள அவர், வரும் 14 ஆம் தேதி வரை அங்கு தங்கியிருந்து புதுக்கட்சித் தொடர்பாக முக்கிய பிரமுகர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் வரும் 12 ஆம் தேதி தனது பிறந்த நாளை பெங்களூருவில் உள்ள அண்ணன் சத்யநாராயணன் வீட்டில் கொண்டாட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு, ஹைதராபாத்தில் நடைபெறும் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் 15ஆம் தேதி கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்