Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் பற்றி வைரலாகும் பகீர் தகவல்

டிசம்பர் 07, 2020 07:02

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்தி இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இனி ஏடிஎம்-களில் ரூ. 100, ரூ. 200 மற்றும் ரூ. 500 நோட்டுகளை மட்டுமே எடுக்க முடியும் என கூறப்படுகிறது.

இனி ஏடிஎம்களில் ரூ. 2000 நோட்டுகள் கிடைக்காது. ரிசர்வ் வங்கி ரூ. 2000 நோட்டுகள் விநியோகத்தை நிறுத்தி உள்ளது. இதன் காரணமாக வங்கிகளும் தங்களின் ஏடிஎம்களில் இருந்த ரூ. 2000 நோட்டுகளை வைக்கும் கேலிபர்களை அகற்றி வருகின்றன. எனும் தகவல் பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.
  
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், ரிசர்வ் வங்கி ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் விநியோகத்தை நிறுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் அரங்கேறி இருப்பின், அது பெரும் செய்தியாக வெளியாகி இருக்கும். மேலும், இதுபற்றி ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

அந்த வகையில் இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் விநியோகத்தை ரிசர்வ் வங்கி நிறுத்தவில்லை என்பது உறுதியாகிவிட்டது. இதேபோன்ற தகவல் முன்னதாக பலமுறை சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

தலைப்புச்செய்திகள்