Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெள்ள சேதம்- புதுவையில் மத்தியக்குழுவினர் ஆய்வு

டிசம்பர் 07, 2020 09:37

புதுச்சேரி: நிவர் புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக உயிர் சேதம் மட்டுமின்றி பொருட்சேதமும் ஏற்பட்டு இருக்கிறது. நிவர் புயல் மற்றும் மழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மத்திய உள்துறை இணைச்செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். 2 குழுக்களாக பிரிந்து மத்திய குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன் தலைமையிலான மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது. மேலும் புதுச்சேரியில் நிவர் புயல், வெள்ள சேதங்களை அசுதோஷ் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

ஆய்வுக்குப்பிறகு புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியுடன் மத்திய குழு ஆலோசனை செய்கிறது.

தலைப்புச்செய்திகள்