Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதலமைச்சரை கண்டித்து 200 பேர் சாலை மறியல்

டிசம்பர் 07, 2020 12:56

சென்னை:

பட்டியல் இனத்தின் 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் கொண்டுவர அரசாணை வெளியிடப் பரிந்துரை செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதைக் கண்டித்தும் வெள்ளாளர் மற்றும் வேளாளர் சமூகத்தின் பெயரை வேறு எந்தச் சமூகத்திற்கும் கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளாளர் சமூக அமைப்பினர் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழை வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட நாகை வந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர இருந்ததால் போலீசார் குவிக்கப்பட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வெள்ளாளர் சமூகத்தினரை போலீசார் கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்