Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேளாண் சட்டங்களை எதிர்க்கும் பிரகாஷ் சிங் பாதலுடன் பேசிய பிரதமர் மோடி

டிசம்பர் 09, 2020 07:23

புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் கடுமையாக எதிர்த்து வருகிறார். டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மத்திய அரசை சாடி வரும் அவர், தனக்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷண் விருதை திருப்பி அளிப்பதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில், நேற்று பிரகாஷ் சிங் பாதலுக்கு 93-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பிரகாஷ் சிங் பாதலை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலைப்புச்செய்திகள்