Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆ.ராசாவை திகார் சிறை வா...வா... என அழைக்கிறது; அமைச்சர் தகவல்    

டிசம்பர் 09, 2020 10:47

சென்னை: 

மதுரை வைகை ஆற்றின் தடுப்பணையில் இருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

ஜெயலலிதா ஆட்சியில் முதல்வரின் சீரிய நடவடிக்கையால் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகள் காரணமாக அனைத்து கிராம ஊராட்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்கள் முழுவதும் நிரம்பி உள்ளன. பனையூர் கால்வாயில் இருந்து தெப்பக்குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு தூய்மையான தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது தெப்பக்குளம் மூன்றாவது முறையாக நிரம்பி உள்ளது.

மதுரையின் மெரினாவாக பொழுதுபோக்கு இடமாக தெப்பக்குளம் மாறியுள்ளது. மதுரையின் நூறு வார்டுகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட ஊரணிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. எடப்பாடியார் ஆட்சியில் மழை மும்மாரி பெய்து கொண்டுள்ளது. 

ஸ்டாலின் ஏதாவது போராட்டம் நடத்த வேண்டும் என நினைக்கிறார். ஊடகத்தில் தன் பெயர் தெரிய வேண்டும் என எண்ணுகிறார். எதிர்காலத்தில் வாகன போக்குவரத்துக்கு முக்கியம் என எண்ணியே எட்டுவழிச்சாலை திட்டத்தை கொண்டு வந்தனர். டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்தபோது சாலை பணிகளுக்காக பழமையான மரங்கள் வெட்டப்பட்டன.

ஆறுவழிச்சாலை திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நிலையில், ஜெயலலிதா எதிர்க்கவில்லை. எதிர்கால திட்டம் என்பதால் ஜெயலலிதா அப்போது போராட்டம் நடத்தவில்லை.

ஆனால் தற்போது அதுபோன்ற பொது நோக்கம் ஸ்டாலினுக்கு இல்லை. ஜீபூம்பா.. ச்சூ மந்திரகாளி எனக்கூறுவது போல உடனடியாக முதல்வராக நினைக்கிறார் ஸ்டாலின். சைக்கிளில் போன ஆ.ராசா தற்போது ஃபாரின் காரில் செல்கிறார். ஊழல்வாதிக்கு பதில் சொல்ல முடியாது. உலகெங்கும் தமிழரின் பெயரை கெடுத்தவர் ராசா.  திகார் வா...வா...என்பதால் ஆ.ராசா பேசுகிறார். இவ்வாறு கூறினார். 

தலைப்புச்செய்திகள்