Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏலியன்களுடன் அமெரிக்கா ஒப்பந்தம்; இஸ்ரேல் விண்வெளி பிரிவு பரபரப்பு தகவல்

டிசம்பர் 09, 2020 10:58

சென்னை:

வேற்றுகிரகவாசிகளின் கூட்டமைப்புடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ விண்வெளிப்பிரிவின் முன்னாள் தலைவர் ஹைம் எஷெட் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மைதான் என்றும், அவர்களுக்கான ஒரு கூட்டமைப்பு இயங்கி வருகிறது என்றும் கூறியுள்ள ஷெட், வேற்றுகிரகவாசிகளுடனான தகவல் தொடர்பு முன்னரே தொடங்கி விட்டதாகவும், பூமியில் சோதனை நடத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் அவர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது பூமியை வேற்றுகிரகவாசிகள் ஆக்ரமிப்பதற்கான முயற்சி அல்ல என்றும், பிரபஞ்ச விதிகளை புரிந்து கொள்வதற்கான தேடலில் அவர்கள் மனித குலத்தையும் உதவியாக சேர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் எஷெட் கூறியுள்ளார். வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவலை வெளியிட டிரம்ப் முயற்சித்ததாகவும், ஆனால் மக்கள் அதற்கு தயாராகவில்லை என்று வேற்றுகிரகவாசிகள் தடுத்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் எஷெட் கூறியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகளுடன் இணைந்து அமெரிக்கா ஒரு நிலத்தடி தளத்தை அமைத்திருப்பதாக கூறும் எஷெட், ஆதாரங்கள் ஏதுமின்றி தான் கூறும் தகவல்களை தற்போது யாரும் நம்பாமல் போகலாம் என்றும், ஆனால் விரைவில் மக்கள் உண்மையை அறிவார்கள் என்றும் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்