Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரு ஓட்டுப் போட ஒரு லட்சம் செலவு செய்து, கடல் கடந்து பறந்து வந்த இளைஞர்கள்

ஏப்ரல் 02, 2019 10:26

தஞ்சாவூர்: ஒவ்வொரு வாக்காளர்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். உங்கள் ஓட்டு உங்கள் உரிமை. ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது. பணம் கொடுக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் பல கோடிகளை செலவு செய்து பல்வேறு வகையிலும் 100 சதவீதம் வாக்கு பதிவிற்கு பிரச்சாரங்களும், விளம்பரங்களும் செய்து வருகிறது. தன்னார்வ அமைப்புகளும், கல்லூரி, பள்ளி மாணவர்களும் விழிப்புணர்வு நாடகம், பேரணி, கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.  அப்படியும் முழு வாக்கு பதிவு நடந்துவிடவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அரசியல் கட்சிகளும் நிறுத்தவில்லை. வாக்காளர்களும் வாங்குவதை நிறுத்தவில்லை. பல இடங்களிலும் சிக்கியுள்ள பணத்தால் தேர்தல்களே ரத்து செய்யும் நிலை வரை சென்றுள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர், அரவாக்குறிச்சி தேர்தல்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் போய் தான் நிறுத்தப்பட்டது.  

 
இந்த நிலையில் ஒரு ஓட்டு போட 3 ஆயிரம் கி.மீ கடல் கடந்து சுமார் ஒரு லட்சம் பணம் செலவு செய்து வாக்களிக்க வந்திருக்கிறார்கள் இளைஞர்கள். அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும். அவர்களைப் பார்த்து வாக்காளர்களும் விழிப்பணர்வு பெற வேண்டும். 
 

தலைப்புச்செய்திகள்