Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இசை கல்லூரிக்கு ரூ.14.85 கோடியில் புதிய கட்டிடம் - முதலமைச்சர் அடிக்கல்

டிசம்பர் 11, 2020 07:56

சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழகத்திற்கு 14 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள, புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் குரலிசை, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம் மற்றும் மிருதங்கம் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்புடன், வார இறுதி நாள்களில் முதுகவின் கலையில் ஓவியம் மற்றும் காட்சி வழித்தொடர்பு ஆகிய பாடப் பிரிவுகளில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில், போதுமான இடவசதி இல்லாமல், திறந்தவெளி கலையரங்கின் மேல்தளத்தின் கீழ், இணைந்தவாறு இயங்கி வருகிறது. இதனால், அனைத்து வசதிகளுடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, புதிய கட்டடம் கட்டும் வகையில், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில், 4 ஆயிரத்து 125 சதுர மீட்டர் கட்டட பரப்பளவில், தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் ரூ.14 கோடியே 85 லட்சம் மதிப்புள்ள புதிய கட்டடத்திற்கு, முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கலை பண்பாட்டுத்துறையின் கீழ், சென்னை, மயிலாப்பூர் லஸ் அவென்யூவில் செயல்பட்டு வரும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தில், ஐந்து வயது முதல் பதினாறு வயதுக்குட்பட்ட பள்ளி மாணாக்கர்களுக்கு குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் போன்ற கலைப்பயிற்சிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இம்மன்றக் கட்டடம் பழுதடைந்த நிலையில், அதை இடித்து விட்டு, அவ்விடத்தில் சுமார் 628 சதுர மீட்டர் கட்டடப் பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், 2 கோடியே 41 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்திற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
 

தலைப்புச்செய்திகள்