Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாரதியார் சிலையில் கைத்தடி மாயம்

டிசம்பர் 11, 2020 08:31

சென்னை: டெல்லியில் பாரதியார் சிலையின் கையில் இருந்த கைத்தடி மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மகாகவி பாரதியின் 139-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. பல்வேறு இடங்களில் பாரதியாரின் சிலைகளுக்கும் புகைப் படங்களுக்கும் அரசியல் தலைவர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் சுப்ரமணிய பாரதி மார்க் சாலையில் இருக்கும் பாரதியாரின் சிலையில் இருந்த கைத்தடி மாயமாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் கைத்தடியை எடுத்தது யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்