Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் 10 அடி மலைப்பாம்பு மீட்பு

டிசம்பர் 11, 2020 11:18

சென்னை: ஈரோடு மாவட்டம், ராமபையலூர் கிராமத்தில் மரவள்ளி கிழங்கு பயிர்களின் இடையில் 10 அடி நீள மலைப்பாம்பு நுழைந்தது. அதனை வனத்துறையினர் மீட்டு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விட்டனர்.

ஈரோடு மாவட்டம், ராமபையலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி(50). இவரது தோட்டத்தில் மரவள்ளி பயிரிட்டுள்ளார். ராமசாமியின் தோட்டத்தில் மரவள்ளி பயிரை அறுவடை செய்யும் பணியில் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மரவள்ளி கிழங்கு பயிர்களுக்கு இடையில் நீளமான மலைப்பாம்பு நடமாடியதை கண்டு விவசாயத் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து சத்தியமங்கலம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத் துறையினர் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

விவசாய தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு, சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக விடப்பட்டது. விவசாய தோட்டத்தில் மலைப்பாம்பு நடமாடிய சம்பவம் அறிந்த கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியை விட்டு வெளியேறிய மலைபாம்பு விவசாய தோட்டத்தில் நுழைந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்