Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம்;  தமிழகம் முழுவதும் நாளை மற்றும் மறுநாள் நடக்கிறது 

டிசம்பர் 11, 2020 12:34

சென்னை: தமிழகம் முழுவதும் 2வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நாளை (டிசம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 13) என 2 நாட்கள் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதனை முன்னிட்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பணியினை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியது. தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் 2வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நாளை (டிசம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (டிசம்பர் 13) 2 நாட்கள் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களில் பொது மக்கள் நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? என்று சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும் 2 இடங்களில் பெயர் இருந்தால் அவற்றை நீக்கவும், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் பெயர்களை நீக்கும் பணிகள் இந்த முகாம்கள் வழியாக செய்யப்படுகிறது. கடந்த முகாமைவிட நாளை நடைபெறுகின்ற முகாமில் அதிக மனுக்கள் பெறப்பட வாய்ப்பு உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்