Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

டிசம்பர் 12, 2020 05:45

சென்னை: ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 ரஜினி இன்று (டிச.12) தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு வழக்கமான பிறந்தநாள் மட்டுமின்றி, ரஜினி அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளானர்.

இந்நிலையில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அன்பான ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்