Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆட்சி கவிழ்ப்பு வேலையில் ஆளுநர் கிரண்பேடி; புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு

டிசம்பர் 12, 2020 10:02

சென்னை: புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை ஆளுநர் கிரண்பேடி செய்து வருகிறார் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது.

புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்து வருகிறார். புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்’ என கூறினார்.

தலைப்புச்செய்திகள்